Advertisment

ஃபிரிட்ஜை திறந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

A 5-year-old child lose their live of electric shock after opening the fridge

சென்னை ஆவடியில் குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலாக மழைக்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

Advertisment

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, வடபழனி, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் குளிர்சாதன பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி ஐந்து வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நந்தவனம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பவரது குழந்தை ரூபாவதி (5 வயது) குளிர்சாதன பெட்டியைத் திறந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

fridge avadi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe