katappa tamilar murder

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிளாக்காடு பகுதியை சேர்ந்த முருகேசன், ஜெயராஜ், முருகேசன், கருப்பண்ணன், சின்னப்பையன் ஆகியோர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அருகில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் 18 ந்தேதி காலை அறிவித்தனர்.

Advertisment

இறந்த 5 பேர் மீது கடப்பா மாவட்டம், வாண்ட்டிமிட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மலைவாழ் மக்களான இவர்கள் வாழப்பாடி கோட்டத்துக்கு உட்பட்ட கருமந்துரை கிராமத்தை சேர்ந்தவர்கள். இதில் இறந்த சின்னதம்பி மகன் முருகேசனுக்கு உண்ணமலை என்கிற மனைவியும், பழனியம்மாள், மீனா, ரோஜா என்கிற மகள்கள் உள்ளனர். இதில் ரோஜாவுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சின்னையன் மகன் கோவிந்தராஜுக்கு கருயா என்கிற மனைவியும், வனிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும், தினேஷ் என்கிற 5 மாத கைக்குழந்தை உள்ளது.

Advertisment

அண்ணாமலை மகன் முருகேசனுக்கு பழனியம்மாள் என்கிற மனைவியும் மணிகண்டன், அசோக், ஐஸ்வரியா என 3 பிள்ளைகளும் உள்ளனர்.

பொன்னுசாமி மகன் கருப்பண்ணனுக்கு 23 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அம்மா பார்வதி, செல்வி, மணி என உடன் பிறந்தவர்கள் உள்ளனர்.

ஆண்டி மகன் சின்னப்பையனுக்கு கண்ணம்மாள் என்கிற மனைவியும், சந்தோஷ், சதிஷ், சிவனேசன் என்கிற மகன் கள் உள்ளனர்.

அவர்களது உடல்கள் கடப்பாவில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் வந்தால் மட்டுமே உடல் ஆய்வுக்கூறு நடக்கும், நான்கு நாட்களுக்குள் வரவில்லை என்றால் உடல் ஆய்வுக்கூறு நடத்தி முடிக்கப்பட்டு வைக்கப்படும் என்கின்றனர்.

இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஆந்திரா மனித உரிமை ஆர்வலர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவமனை முன்பு அதிரடிப்படை போலிஸார் குவித்து வைத்துள்ளனர்.

உண்மையில் செம்மரம் வெட்ட வந்தவர்களா ?, அவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதனால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.