Advertisment

செல்வாக்கை இழந்தது பாஜக - ரஜினிகாந்த் பேட்டி

rajini

Advertisment

நடிகர் ரஜினியின் பிறந்த நாள் ரசிகர்களால் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர். பத்திரிகையாளர்களும் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு செல்பி எடுத்துக்கொண்டனர். பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்துவிட்டு, பின்னர் ஐந்து மாநில தேர்தல் குறித்து பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் காரில் விமான நிலையம் புறப்பட்டார். நாளை மும்பையில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடும்பத்துடன் கலந்து கொள்ள இன்றே புறப்பட்டுச் சென்றார். காரில் புறப்படும்போது ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு சென்றார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ''என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்து இருப்பதை காட்டுகிறது, இது கட்சிக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை'' என்றார்.

5 State election interview rajini results
இதையும் படியுங்கள்
Subscribe