ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5 ரூபாய் விலையில் முக கவசம் வழங்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி முக கவசம் வழங்கும் எந்திரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி, ஏப்ரல் 28 ந்தேதி துவக்கி வைத்தார்.
சாதாரண முககவசம் மருந்து கடைகளில் 20 ரூபாய் என்கிற விலையில் விற்கப்படுகிறது. இந்நிலையில் 5 ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முககவசம் வழங்குவது பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தனியாரிலும் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.