5 pounds of jewelry stolen for putting water cans; youth arrested

சென்னையில் தண்ணீர் கேன் போடுவதாக சொல்லி இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் ஐந்து பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை அண்ணா நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம் தண்ணீர் கேன் போடவந்துள்ளதாக இளைஞர் கூறியுள்ளார். வீட்டில் இருந்த மூதாட்டி, தான் தண்ணீர் கேன் எதுவும் கேட்கவில்லை என கிரில் கதவு வழியாக அந்த இளைஞரிடம் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, திடீரென அந்த இளைஞர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு ஓடினார். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையின் அடிப்படையில் ஓட்டேரியை சேர்ந்த பிரகாஷ் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment