Advertisment

டீ கடையில் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்!

5 people were injured in a cylinder explosion in a tea shop!

ராணிப்பேட்டையில் டீ கடையில் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்துள்ள வானபாடி என்ற பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவரது வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள ஒரு பகுதியை டீக்கடையாக செல்வராஜ் நடத்தி வந்துள்ளார். இதற்காக பால் காச்சுவதற்காக ஒரு அறையை பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை செல்வராஜ் வழக்கம்போல் தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை மீண்டும் கடையை திறந்து வியாபாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அதேபகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்குபேர் டீ குடிக்க வந்துள்ளனர். அப்பொழுது அறையைத் திறந்து மின்விளக்கை செல்வராஜ் ஆன் செய்த பொழுது, திடீரெனசிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த செல்வராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment
cylinder incident ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe