Advertisment

கூலித்தொழிலாளி  வெட்டிக்கொலை... இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது!

5 people including two minors were arrested!

தூத்துக்குடியில் கூலித்தொழிலாளி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

தூத்துக்குடி பிரேம் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். பெயிண்டராக பணியாற்றி வந்த சரவணக்குமார் சனிக்கிழமை இரவு அவரது தம்பியையும் உறவினர் சிவாவையும்பேருந்து ஏற்றி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி சரவணகுமாரை படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரவணக்குமார் உயிரிழந்தார். அவரது தம்பியும், அவரது உறவினரும் இதனைக் கண்டு ஓட்டம் பிடித்தனர். தூத்துக்குடி வடபாகம் போலீசார் இந்த கொலைதொடர்பாக மனோ, துரைசாமி, கார்த்திக், இரண்டு சிறார்கள் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் 3 விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

incident police Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe