Advertisment

போலீஸை கத்தியால் தாக்கியதை நானே பார்த்தேன்: நியாயப்படி 5 பேரையும் சுட்டிருக்கவேண்டும்: ரவுடி ஆனந்தன் மனைவி!

Row

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

போலீஸை சரமாரியாக கத்தியால் தாக்கியதை நானே பார்த்தேன். நியாயப்படி பார்த்தால் அந்த 5 பேரையும் சுட்டிருக்கவேண்டும் என என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தன் மனைவி தெரிவித்துள்ளார்.

போலீஸ் என்கவுண்ட்டருக்கு பலியான ரவுடி ஆனந்தனுக்கு ரஷிதா (வயது 24) என்ற மனைவியும், 4 வயதில் அவினாஷ் மகனும், நிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தன் ரஷிதாவை காதலித்து மணம் முடித்தார்.

Advertisment

ரவுடி என்றாலும் ஆனந்தனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் ரஷிதா வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தன் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் கேட்டு ரஷிதா அதிர்ச்சி அடைந்தார்.

கணவர் ஆனந்தன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து ரஷிதா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சம்பவத்தன்று எனது கணவர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சீனு, ஸ்ரீதர், அரவிந்தன் உள்பட 10 பேரும் அந்த போலீஸ்காரரை அடித்து உதைத்தனர். 5 பேர் கையில் கத்தி இருந்தது. 5 பேரும் அந்த போலீஸ்காரரை தலையிலேயே குத்தி தாக்கினர். நான் என் கணவரை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை.

என் வீட்டுக்காரர் மட்டும் தாக்கவில்லை. கத்தி வைத்திருந்த 5 பேரை தவிர மற்றவர்கள் அந்த போலீஸ்காரர் கை, கால்களை பிடித்துக்கொண்டனர். அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியதை நானே பார்த்தேன். எல்லாரும் இக்காட்சியை கண்டு பயந்து நடுங்கினர்.

ஆனால் இந்த சம்பவத்துக்கு என் கணவரை மட்டும் சுட்டு கொன்றுவிட்டனர். போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய ‘எல்லோரையும் சுடாமல், என் கணவரை மட்டும் சுட்டது ஏன்?’ நியாயப்படி பார்த்தால் அந்த 5 பேரையும் சுட்டிருக்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.

Rowdy Anandan was shot dead in the encounter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe