
தமிழகத்தில் மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஷிவதாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உயர்கல்வித் துறை செயலாளராக கார்த்திகேயன் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக தீராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சர்க்கரை உற்பத்தி துறை மற்றும் ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளராக ஹர்மந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)