திருவள்ளூரில் ஐந்து மாதபெண் குழந்தையின் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் பாண்டூர் என்ற இடத்தில் வசித்துவரும்ராபின் அவரது மனைவி லிடியா என்ற தம்பதிகளுக்கு ஒரு ஐந்து மாத பெண்குழந்தை இருந்தது.
சம்பவத்தன்று காற்றோட்டம் இல்லை என வீட்டின் கதவுகளை திறந்து வைத்தபடி லிடியா தூங்கியுள்ளார். அப்படி தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென கண்விழித்த லிடியா அருகில் படுக்க வைத்திருந்த தனதுஐந்து மாத பெண்குழந்தையை காணவில்லை என பதறி வெளியே ஓடி வந்துள்ளார்.
அப்படி வெளியில் வந்து பார்க்கும்பொழுதுவெளியில் அவரது பெண் குழந்தை கழுத்து மற்றும் ஒருபக்க காது அறுபட்ட நிலையில் துடித்துக்கொண்டிருந்தார். மேலும் பதறியடித்த லிடியா தனது குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் சேர்த்துள்ளார். அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகழுத்தில் தையல்கள் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்துலிடியா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஐந்து மாத குழந்தையை ஈவு இரக்கமின்றி கழுத்தை அறுத்த கொடூரன் யார் என்று போலிசார்விசாரித்து வருகின்றனர்.