/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/19_138.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நணசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட இளங்குடிப்பட்டி வயல்வெளியில் உள்ள நகரசிவமடம் முன்பு நேற்றில் இருந்து கார் ஒன்று நின்றுள்ளது. இதனைப்பார்த்த மடத்தின் காவலர் அடைக்கலம் ஜன்னல் வழியாக காருக்குள் பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.
காருக்குள் பலர் இறந்து கிடந்ததைப் பார்த்து நணசமுத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட போலிசார் கார் கதவைத் திறந்து பார்த்த போது 3 பெண்கள் உள்பட 5 பேர் இருக்கையிலேயே இறந்து கிடந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இவர்கள் சேலம் டவுன் ஸ்டேட் பேங்க் காலனிய சேர்ந்த மணிகண்டன் (55) அவரது மனைவி நித்யா (50), மகன் தீரன் (21), மகள் நிகாரிகா (20), சரோஜா (60) ஆகியோர் என்பதும், கடன சுமையால் இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. சேலத்தைச் சே்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)