5 lakh salary for praising and planning .. Police looking for Madan's friends!

Advertisment

ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பானபுகாரில்பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில்,தலைமறைவான அவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரியில் ஒருவீட்டில் பப்ஜி மதன் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில், சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் அங்கு சென்று மதனை கைது செய்து, சென்னை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். போலீசில் சிக்கிய உடன், ‘நான் செய்தது தவறு’ என போலீசார் காலில் விழுந்து மதன் அழுதுகெஞ்சியதாகவும், அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது.

கைது செய்யப்பட்ட மதன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 509, 294 பி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்ஃபோன், லேப்டாப் ஆகியவற்றைக் கொண்டு மதனுக்கு உதவிய அவரது தோழிகளைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் யூடியூபில் ஆபாசமாகப் பேசி இதுவரை 4 கோடிவரை சம்பாதித்துள்ளனர். இருவரது வங்கிக் கணக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீடியோக்களில் புகழ்ந்து பேசுவதற்கும், திட்டுவதற்காகவும் தோழிகளைச் சம்பளம் கொடுத்து மதன் வேலைக்கு அமர்த்தியிருந்ததுபோலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புகழ்ந்து பேசவும், திட்டுவதுபோல நடிக்கவும் 5 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய்வரை சம்பளம் கொடுத்துள்ளார்.ஆபாசமாகப் பேசி சம்பாதித்த பணத்தில் வாங்கிய இரண்டு ஆடி கார்களைப் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.