Skip to main content

“புதுமைப்பெண் திட்டம் மூலம் 5 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

 5 lakh female students are benefiting from the Innovative Women Project

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொ குதிக்குட்பட்ட,  ரெட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2. 34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “முதலமைச்சர்  ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒட்டன் சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ரெட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரெட்டியபட்டி பெரிய கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.12.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடங்கள் மற்றும் சின்ன கரட்டுப்பட்டியில் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம்,  ரெட்டியபட்டியில் ரூ.28.01 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், பெரிய கரட்டுப்பட்டியில் ரூ.14.00 மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், நமக்கு நாமே திட்டத்தில் சின்ன கரட்டுப்பட்டி மற்றும் பெரிய கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடங்கள், பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தில் சின்ன கரட்டுப்பட்டியில் பட்டறை அருகில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் பெரிய கரட்டுப்பட்டியில் ரூ.23.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டி,  கனிமவள நிதியிலிருந்து  ரெட்டியபட்டியில் ரூ.20.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம சாவடி என மொத்தம் ரூ.2.34கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 5 lakh female students are benefiting from the Innovative Women Project

அதுபோல் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 18.00 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 44 மாதங்களில் 2,600 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 86 புதிய கடைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.70 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 லட்சம் மாணவிகள் மாதந் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கு ம் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 5 lakh female students are benefiting from the Innovative Women Project

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலை கள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1400 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை யை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார்” என்று கூறினர்

சார்ந்த செய்திகள்