
சந்திரயான் 3 விண்கலம் தொடர்பான செய்திக்காக நேற்று தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் என்பவர் திருவனந்தபுரம் சென்றிருக்கிறார். பின்பு அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு சக செய்தியாளர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளானது. அதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சங்கரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சங்கர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, டிடிவி தினகரன், உள்ளிட்ட பலரும் சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.