Advertisment

ரயிலில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர் கைது!

5 kg of cannabis  in train seized; Odisha youth arrested

Advertisment

சேலத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபரையும் கைது செய்தனர்.

சேலம் ரயில்வே காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜூன் 24),தன்பாத்& ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஏறி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில்அமர்ந்திருந்தஒருவாலிபரைப்பிடித்து விசாரித்தனர். அவருடைய பெயர்மோத்திநாயக் (25) என்பதும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அவர்பண்டல்பாண்டலாகக்கட்டி, கடத்தி வந்துள்ளார்.

ஒடிசாவில் இருந்துஜோலார்பேட்டைவருவதற்குடிக்கெட்எடுத்துள்ளார். ஆனால், அதே ரயிலில்கஞ்சாவைசேலத்திற்குகடத்தி வந்திருப்பதும், இங்குள்ள சில தரகர்களிடம்விற்பனைசெய்வதற்காககொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்துமோத்திநாயக்கை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Cannabis Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe