சென்னை கமிஷ்னர் உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி-யாக பதவி உயர்வு!!

ik

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபிகளாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உடல்நலம் சீரடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்நிலையில் அவர் உள்ளிட்ட ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபிகளாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமா ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் சீமா ஐபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

dgp
இதையும் படியுங்கள்
Subscribe