5, including 3 nurses affected in corona in  Chidambaram

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு காமராஜ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து பிரிவு நோயாளிகளுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது கரோனா வைரஸ் நோய் தொற்று உடையவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

Advertisment

Advertisment

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 3 பெண் செவிலியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சென்னையில் இருந்து குடும்பத்துடன் திரும்பிய பெண் ஒருவருக்கும், 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் ஒருவருக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் 5 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையொட்டி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

மேலும் அவசர சிகிச்சை பிரிவு வார்டு முழுவதும் அடைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிதம்பரம் பகுதியில் 3 செவிலியர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் உட்பட 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மே 5- ந்தேதி வரை 229 பேர் தொற்று ஏற்பட்டு 26 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.