Advertisment

கடன் தவணை செலுத்தாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது!

5 employees of a financial institution arrested for misbehaving with a woman

Advertisment

கிருஷ்ணகிரியில்கடன் தவணை செலுத்தாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி பழைய சுப்புராயசெட்டி தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவருடைய மனைவி சுமதி(40). தீனதயாளன்இறந்துவிட்ட நிலையில், சுமதி காட்டிநாயக்கன்பள்ளியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவர்தனியார் நிதி நிறுவனத்தில் 1.80 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்கு மாதந்தோறும் 8500 ரூபாய் வீதம் கடந்த ஐந்து மாதங்களாக தவணை செலுத்தி வந்துள்ளார். நடப்பு பிப்ரவரி மாதத்திற்கான தவணைதேதி கடந்த பிறகும்உரிய தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்ததாகத் தெரிகிறது.

Advertisment

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் பூவரசன், கடன் வசூல் பிரிவு ஊழியர் கொத்தேப்பேட்டா ராஜ்குமார், பாஞ்சாலியூர்ஆறுமுகம், பழையபேட்டை ஜீவா(24), பிரவீன்குமார்(26) ஆகிய ஐந்து பேரும் சுமதியின் வீட்டுக்குச் சென்று கடன் தவணையைசெலுத்தும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அப்போது, சுமதி தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும், பிறகு செலுத்தி விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தஊழியர்கள்,அவரை ஆபாசமாகப் பேசியதோடுபாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி, இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நிதி நிறுவன ஊழியர்கள் 5பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர்அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுகிருஷ்ணகிரி கிளைச்சிறையில்அடைக்கப்பட்டனர்.

arrested krishnakiri police
இதையும் படியுங்கள்
Subscribe