5 days police custody for Varichiyur Selvam

Advertisment

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில், அவருடைய கூட்டாளியான விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமாரை, 2021-ல்சென்னையில் வைத்து வரிச்சியூர் செல்வத்தின் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். செந்தில்குமாரின் உடலை வெட்டி தூத்துக்குடி அருகிலுள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் வீசினர்.

இந்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கடந்த 21ஆம் தேதி கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்ததைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் வரிச்சியூர்செல்வத்தை ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜூலை 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வத்தை ஆஜர்படுத்தஉத்தரவு பிறப்பித்தார். செந்தில்குமார் கொலையின் பின்னணியில் வரிச்சியூர் செல்வத்தின்சொந்த விவகாரம் இருப்பதாகப் பேசப்படும் நிலையில்,கொலைக்கான உண்மைக் காரணம் போலீஸ் விசாரணையில் வெளி வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.