உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

 5 days holiday for liquor stores... The order of the Collector of Coimbatore

கோவை மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து டாஸ்மாக்‌ மதுபானக்‌ கடைகள்‌ (FL1‌) அதனுடன்‌ இணைக்கப்பட்ட மதுபானக்‌ கூடங்கள்‌ (Bar) அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம்‌ போன்ற கிளப்களில்‌ செயல்படும்‌ மதுக்கூடங்கள்‌ (FL2) மற்றும்‌ நட்சத்திர ஹோட்டல்களில்‌ செயல்படும்‌ மதுக்கூடங்கள்‌ (FL3), தமிழ்நாடு ஹோட்டல்‌ (FL3A) , மிலிட்டரி கேண்டீன்கள்‌ (FL4A) மற்றும்‌ விமான நிலையத்தில்‌ உள்ள மதுக்கூடம்‌ (FL10), விற்பனை கூடங்கள் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள்‌ (FL11) ஆகியவை தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி, மதுபானங்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.