Skip to main content

ஒரே ஆம்புலன்ஸில் 5 கரோனா நோயாளிகள் பயணம்!!! –அதிருப்தியில் மக்கள்

Published on 07/07/2020 | Edited on 07/07/2020
Vellore District

 

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. ஜூலை 7ந் தேதி மட்டும் 99 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்தம் 2,200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகள், தடுப்பு மையங்கள் முழுவதும் நிரம்பியுள்ளது.

தினமும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாகவே வந்துக்கொண்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்வதற்கான வாகனங்கள் மிக குறைவாக உள்ளன. அதோடு, பி.பி.இ. கிட் மிகவும் குறைவாக இருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் வசதியும் மிக குறைவாக இருப்பதால், ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் 5 பேர், 7 பேர் என அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, இது மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

இப்படி அழைத்து செல்வது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் உத்தரவுக்கு எதிரானது என்கிறார்கள் மருத்துவ பணியாளர்கள். இப்படி பாதுகாப்பற்ற முறையில் செயல்படுவதால்தான், என்னென்ன ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள் என மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம் என்கிறார்கள் திமுகவினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெகிழ்ச்சி செயல்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
election campaign; Minister Udayanidhi Stalin's resilience

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இருப்பினும் அங்கிருந்த கூட்ட நெரிசலால் அவ்விடத்தை விட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை. அதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்சிற்கு வழிவிடும் விதமாக உடனடியாக தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் அம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.