Advertisment

ஒரே நாளில் 5 கல்லூாி மாணவிகள் திடீரென்று மாயம்!

குமாி மாவட்டத்தில் கல்லூாி மாணவிகள் மாயம் என்பது தொடா் கதையாக உள்ளது. காலையில் பெற்றோருக்கு டாட்டா காட்டிவிட்டு செல்லும் மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை என்று தினம் ஒரு காவல் நிலையத்தில் புகாா் ஆகாத நாட்களே இல்லை. சமீப காலமாக குமாி காவல் நிலையங்களில் கல்லூாி மாணவிகள் மாயமானதாக குறைந்தது 100 க்கு மேற்ப்பட்ட புகாா்கள் குவிந்து கிடக்கின்றன.

Advertisment

இந்த நிலையில் தான் நேற்று கல்லூாிக்கு சென்ற 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை என்று இன்று பெற்றோா்கள் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.

Advertisment

திருவட்டாா் இல்லத்து விளையை சோ்ந்த அனுஷா ஆசாாிப்பள்ளம் மருத்துவ கல்லூாியில் டிப்ளமோ மயக்கவியல் பிாிவில் படித்து வருகிறாா். வழக்கமாக கல்லுாிக்கு சென்று மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வருவாள். ஆனால் நேற்று இரவு வரை வீடு திரும்பாததால் பெற்றோா்கள் அதிா்ச்சியடைந்தனா். இன்று கல்லூாிக்கு சென்றுவிசாாித்த போது அவள் நேற்று கல்லூாிக்கு வரவில்லை என தொியவந்தது. இதை தொடா்ந்து தாயாா் சந்திரகலா திருவட்டாா் போலீசில் புகாா் கொடுத்துள்ளாா்.

5 college students in one day suddenly magic!

இதே போல் மாா்த்தாண்டம் பரக்காணி விளையை சோ்ந்த திவ்யா மண்டைக்காடு கல்லூாியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். நேற்று கல்லூாிக்கு போன இவளும் வீடு திரும்பவில்லை. தந்தை ராஜகுமாா் மாா்த்தாண்டம் போலீசில் புகாா் கொடுத்துள்ளாா்.

சுசிந்திரம் நல்லூரை சோ்ந்த அருணா நாகா்கோவிலில் தனியாா் கல்லூாியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். நேற்று தந்தையுடன் கல்லூாிக்கு சென்றவள் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோா்களும் உறவினா்களும் பல இடங்களில் தேடியும் அவளை காணவில்லை . இதைதொடா்ந்து இன்று சுசிந்திரம் போலீசில் புகாா் கொடுத்தனா்.

இதே போல் தக்கலையை சோ்ந்த ஒரு மாணவியும் முளகுமூட்டை சோ்ந்த ஒரு மாணவியும் திருவிதாங்கோட்டில்உள்ள ஒரு கல்லூாியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா்கள். கல்லூாி தோழிகளான இருவரும் நேற்று கல்லூாிக்கு சென்றுவிட்டு மாலை கல்லூாி முடிந்து இருவரும் வீடு திரும்ப வில்லையாம். இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா்கள் தக்கலை போலீசில் புகாா் கொடுத்துள்ளனா்.

இப்படி தினம் மாணவிகள் மாயம் பெற்றோா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police students Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe