peo

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இறுதி ஊர்வலம் குறித்து திமுக தலைமைக் கழக அறிவிப்பு:

’’திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - தமிழினத் தலைவருமான கலைஞர் அவர்களின் புகழுடல் தாங்கிய இறுதி ஊர்வலம் இன்று (8.8.2018) மாலை 4.00 மணி அளவில் ராஜாஜி ஹாலிலிருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக, தந்தை பெரியார் சிலையை கடந்து, பேரறிஞர் அண்ணா சிலை வந்தடைந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisment

கழக உடன்பிறப்புகளும் - பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’’