Advertisment

செல்ஃபோனில் ஆபாசப்படம் அனுப்பி 49 ஆயிரம் ரூபாய் பறிப்பு...  இருவர் கைது!  

49 thousand rupees robberry ... Two arrested!

பெண்ணின் கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பியவர் கைது செய்யப்பட்டதோடு பணம், பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளைபறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கரூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கரூர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், 'கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரின் செல்ஃபோன் வாட்ஸ் அப் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து ஒரு பெண்ணின் ஆபாச படம் வந்தது. பின்னர் அந்த எண்ணிலிருந்து மர்ம ஆசாமி ஒருவர் எனது கணவரின் செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டு இதைப் போன்று உனது மனைவியின் ஆபாசப்படம் என்னிடம் உள்ளது. அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் எனது கணவர் ஆன்லைன் மூலம் 49 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

Advertisment

பின்னர் மீண்டும் எனது கணவரைத் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'என கூறியிருந்தார். இது தொடர்பாகக் கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வங்கி அதிகாரியின் கணவரிடம் பணம் பறித்ததாக அஜித்குமார் மற்றும் பிரசாந்த் என்ற இருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம், பாஸ்போர்ட், லேப்டாப், 14 ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் இருவரும் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

CYBER CRIME POLICE karur Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe