Actor Sarath Kumar

Advertisment

தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 48வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அக்கிராம மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களிடம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள தீங்குகள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.போராட்டத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக கூறினார்.