4700 vehicles seized for violating curfew

திருச்சி மாநகரில் ஊரடங்கு காலத்தில் காரணமில்லாமல் சுற்றித்திரியும் நபா்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதோடு, அவர்களிடம் இருந்து வாகனங்களையும் பறிமுதல் செய்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டும், வாகன ஓட்டிகள் வெளியில் சுற்றுவதுகுறையவில்லை.

Advertisment

எனவே காவல்துறையும் அதிரடியாக களத்தில இறங்கி வாகனங்களைப் பறிமுதல் செய்யும் பணியை தற்போது துரிதப்படுத்தி உள்ளனா். அதன்படி 55 கார்கள், 144 ஆட்டோக்கள், 4,518 இருசக்கர வாகனங்கள்என மொத்தம் 4,717 வாகனங்களைக் காவல்துறை பறிமுதல் செய்து ஆயுதப் படை மைதானத்தில் பாதுகாத்துவருகிறது. மேலும், உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வாகனங்களைத் திருப்பிக் கொடுப்போம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.