Advertisment

இணங்க மறுத்த 47 வயது பெண் அடித்துக் கொலை; 2 இளைஞர்கள் கைது; சென்னையில் நிகழ்ந்த பயங்கரம்

A 47-year-old woman who refused to comply was beaten ; 2 youths arrested; A terrible incident happened in Chennai

Advertisment

சென்னை கொடுங்கையூரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை உறவினரான இளைஞரே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள கண்ணன் தெருவைச்சேர்ந்தவர் அன்பு. இவருடைய மனைவி வேளாங்கண்ணி (47). அன்பு-வேளாங்கண்ணி தம்பதிக்கு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியின் கணவர் அன்பு அவருடைய மகன், மகள் ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேளாங்கண்ணி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

A 47-year-old woman who refused to comply was beaten ; 2 youths arrested; A terrible incident happened in Chennai

Advertisment

மாலையில் வேலை முடிந்தவுடன் அவருடைய மகன் மரியம் லாரன்ஸ் வீட்டுக்கு வந்தபொழுது தாய் வேளாங்கண்ணி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடனடியாக போலீசார் தனிப்படை அமைத்து இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதே கொடுங்கையூர் பகுதியில் உள்ள லூயிஸ் மாதா தெருவில் வசித்து வரும் வேளாங்கண்ணியின்தம்பி யுவராஜ் என்பவருடைய மகன் அகஸ்டின் அருண் மற்றும் கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த சாலமன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்த பொழுது வேளாங்கண்ணியின் தம்பி மகன் அகஸ்டின் அருண் வேளாங்கண்ணியை முறையற்ற தொடர்புக்கு கட்டாயப்படுத்திய நிலையில் வேளாங்கண்ணி அருணை எச்சரித்துள்ளார். அப்பொழுது நடந்த வாக்குவாதத்தில் சுவற்றின் மீது தள்ளி வேளாங்கண்ணியை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் தற்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Investigation police incident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe