
திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் பெரமங்கலத்தில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி ஊராட்சி ஒன்றியம் பெரமங்கலம் கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு நேற்று முன்தினம் (30.05.2021), தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுமார் 290 நபர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் இன்று 47 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுள்ளனர். மேலும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஒன்றிய அலுவலர்கள் அங்கு முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர். மேலும் ஊருக்குள் யாரும் நுழைய தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருகின்றனர். இதன் காரணமாக அங்கு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.