40 லட்சம் கடனுக்கு 45 லட்சம் வட்டியா ?

வேலூர் மாவட்டம் ஆம்பூர ஈத்கா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் இன்டிசார் முகமது. இவர் அதே ஆம்பூரை சேர்ந்த மற்றொரு தொழிலதிபரும், பைனான்ஸியருமான அருண்குமார் என்பவரிடம் தொழில் அபிவிருத்திக்காக வாங்கிய ரூபாய் 40 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

loan

வாங்கிய கடனுக்கு சரியாக நீ வட்டி கட்டவில்லையெனச்சொல்லி 40 லட்சம் கடனுக்கு 85 லட்சம் கேட்டுள்ளார். இது பிரச்சனையாக மே17 ந்தேதி இரவு முகமதுவை கடத்தி ஆம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார் அருண்குமார். அருண்குமார்க்கு உடைந்தையாக நேதாஜி என்பவரும் இருந்துள்ளார்.

முகமது கடத்தப்பட்டதை அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் சொல்ல, கடத்தப்பட்ட முகமதுவை மீட்டவர்கள் அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரை ஆம்பூர் போலிஸார் கைது செய்து கந்துவட்டி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

interest loan police
இதையும் படியுங்கள்
Subscribe