Published on 01/03/2019 | Edited on 01/03/2019

திருவள்ளூர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லி கடை ரூபாய் 45 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் முருகன் இட்லி கடை தொழிற்சாலைக்கான மின் இணைப்பை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் 45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவிப்பொறியாளர் ஜெயபிரகாஷ் புகார் அளித்துள்ளார்.