Advertisment

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஆட்சியர்! 

44th International Chess Olympiad! Collector who took a selfie in the awareness program!

Advertisment

சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

44th International Chess Olympiad! Collector who took a selfie in the awareness program!

Advertisment

அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு மஞ்சைப்பைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக செல்ஃபி பாயின்டில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிகள், இருசக்கர வாகன பேரணி, ரங்கோலி போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன” என்றார்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe