ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவர். விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த ரயிலில் கணேசன்(38) பாத்திமா(66) சசிகலா(38) பாண்டீஸ்வரி(35) ஆகிய பயணிகளின் செயல்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால், அவர்களது பையை போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் கஞ்சா பொட்டலம் கடத்தி வந்தது தெரியவந்தது. ரயில் மூலம் சென்னை வந்து, சென்னையில் இருந்து தேனிக்கு பேருந்தில் கஞ்சாவை கடத்தி செல்ல அவர்கள் திட்டமிட்டது தெரியவந்திருக்கிறது. இந்த கும்பலிடம் இருந்து 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.