44 electric trains canceled for maintenance work

Advertisment

சென்னையில் ஏற்கனவே கடந்த வாரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது பயணிகளுக்கு அவதி ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்றும் 44 மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் 44 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதேநேரம் சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதனால் இன்றும் அக்டோபர் 13, 18, 23, 27 ஆகிய 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டை -வேளச்சேரி அருகே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை பார்த்துட்டு இரவு நேரத்தில் புறப்படும் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு இயக்கப்படுவதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.