தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.
அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில்30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில்மதுரை மாவட்டத்தில் மேலும் 94 பேருக்குகரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றுவரை 988 பேருக்கு மதுரையில் மொத்தமாக இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மொத்த பாதிப்பு 1,082 ஆக அதிகரித்துள்ளது.மதுரையில் ஊரடங்கு விதிகளை மீறிய 43 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மீறி கூடுதல் நேரம் வியாபாரம் செய்தல் உள்ளிட்ட புகாரில் 43 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.