Skip to main content

தமிழகத்தில் 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்;பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
pp

 

போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிய 442 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

திருச்சியில் 6 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில்  போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 6 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல் ராமநாதபுரத்தில் 19 ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் 19 பேரை பணி நீக்கம் செய்ய ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

புதுக்கோட்டையில் 14 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் போராடிய ஈடுபடுத்திய ஜாக்டோ ஜியோ  ஒருங்கிணைப்பாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 28 பணிக்கு வந்தால்  நடவடிக்கை இல்லை. பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம் எனவும்   பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்