விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.42,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்... கைது...!

42,000 worth of tobacco products seized in Villupuram district

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் ரோஷணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ரோஷணை பாட்டை பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (39) என்பவர் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து திண்டிவனம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.கணேசனின் உத்தரவின் பேரில் ரோஷணை உதவி ஆய்வாளர் திரு.முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.அருள்தாஸ் மற்றும் போலீசார் அந்த நபரின் வீட்டில் சோதனை செய்ததில் ரூ.42,000 மதிப்புள்ள 56 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe