42 town panchayats in Erode without open defecation

Advertisment

தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் வீடுகளில் கழிப்பிடம் கட்டித் தரப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து பகுதிகளிலும், வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில்42 டவுன் பஞ்சாயத்து பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மண்டல உதவி இயக்குநர் அலுவலக (டவுன் பஞ்சாயத்துகள்) அதிகாரிகள் கூறியதாவது, “ஈரோடு மாவட்டத்தில், 42 டவுன் பஞ்சாயத்துகளில்630 வார்டுகள் உள்ளன. இவற்றில் சுகாதாரம் சார்ந்த ஆய்வில் தனி நபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு உடனடியாக கட்டித் தரப்படுகிறது. இதன்படி கடந்த2015–16ல், 5,264 தனி நபர் வீடுகளிலும், 2016–17ல்11,104 வீடுகளிலும், 2017–18ல்4,134 வீடுகள், 2018–19ல்50 வீடுகளிலும் கழிப்பறை கட்டித்தரப்பட்டது. இதற்கு16.44 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

பின் நடத்திய ஆய்வில் கடந்த2020–21ல்50 கழிப்பறை ஒதுக்கீடு செய்து47 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 2021–22ல்282 தனி நபர் வீடுகளில் கழிப்பறை ஒதுக்கீடு செய்து166 வீடுகளிலும், 2022–23ல்585 வீடுகளுக்கு கழிப்பறை ஒதுக்கீடு செய்து278 வீடுகளுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு பணிகள் நடந்து வருகிறது. இதன்படி, 42 டவுன் பஞ்சாயத்துகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத டவுன் பஞ்சாயத்துகளாக மத்திய அரசின் தர ஆய்வுக்குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது. டவுன் பஞ்சாயத்து பகுதியில் கழிப்பிடங்கள் பயன்படுத்துதல், கழிவுகளை மக்கும் – மக்காத கழிவுகளாகத்தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர்கள், 104 பேர் பணி செய்து உறுதி செய்து வருகின்றனர்” என்றார். திறந்தவெளியில் மலம் கழிக்கவில்லை என்று அதிகாரிகள் சொல்வது எல்லாம் ஒரு கணக்குக்கு தான் எனத்தூய்மைப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.