ராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவரின் கணவர் சிமென்ட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 60 வயதைக் கடந்த அவருக்கு கரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அந்த நபர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தகவலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில், இவர் 41-வது நபர் ஆவார்.தற்போது தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.