Advertisment

4000 போலீசார் குவிப்பு- உச்சகட்ட கண்காணிப்பில் 'ராமேஸ்வரம்'

4000 police personnel deployed - Rameswaram under maximum surveillance

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் பிரதமரின் வருகை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கூறியுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் நாளான 06/04/2025 அன்று 11 மணி முதல் 3 மணி வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6000க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

4000 police personnel deployed - Rameswaram under maximum surveillance

பிரதமர் மோடி வரவுள்ள மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மட்டும் சுமார் 4000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மணி வரை எந்த ஒரு தரிசனத்திற்கும், தீர்த்த நீராடுதலுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் உச்சிப்புளி பகுதியிலேயே நிறுத்தப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pamban Rameswaram modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe