'400 special vaccination camps in Chennai' - Corporation announcement!

சென்னையில் வரும் 26 ஆம் தேதிமுதல் 400 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம் குறைந்திருந்தாலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத் தகுந்த அம்சமாகதமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு இரண்டு தடுப்பூசி முகாம் என மொத்தம் 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட இருக்கிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வரும் 26 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.