Advertisment

சாமி கும்பிட சென்ற சிறுமியை வன்கொடுமை செய்த பூசாரி;  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  

40 years imprisonment for temple priest who made girl pregnant in Tirupur

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அய்யப்பன் பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு 14 வயது சிறுமி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது பூசாரி அய்யப்பன் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

Advertisment

இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர, உடனடியாக உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி ஸ்ரீதர் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.

Advertisment

அதில், சிறுமியை வன்கொடுமை செய்ததற்காகபூசாரிக்கு 20 வருடச் சிறைத் தண்டனையும், கர்ப்பமாக்கியதற்காக 20 வருடச் சிறைத் தண்டனையும் என மொத்த 40 வருடச் சிறைத் தண்டனையும், 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

police thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe