Advertisment

ஒரு நெல் மூட்டைக்கு 40 ரூபாய்... நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

PP

Advertisment

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் எனுமிடத்தில்நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொள்முதல் நிலையத்திற்கு வள்ளியம்மை என்றவிவசாயி 62 நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்றுள்ளார். அப்பொழுது கொள்முதல் நிலையத்தில் இருந்த ஊழியரான சிவசக்தி என்பவர் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்த விவசாயிடம் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் என வசூல் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த விவசாயியின் உறவினர்கள் நேரில் சென்று கேட்டபோது அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நடைபெறுகிறது எனக் கூறியஊழியர்சிவசக்தி, காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது. மூட்டை தூக்குவோருக்கு அரசு மூன்று ரூபாய் மட்டுமே கொடுக்கிறது என பேசியவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்துகொள்முதல் நிலைய அலுவலர் வரதராஜன், உதவியாளர் சிவசக்தி ஆகியோரை தமிழக நுகர்பொருள் வாணிப கழக அரியலூர் மண்டல மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரன்பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Ariyalur incident paddy stock
இதையும் படியுங்கள்
Subscribe