Published on 22/03/2021 | Edited on 22/03/2021

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகிவந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி ஆகிய மூன்று கிளைகளில் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.