40 lakh worth of gold confiscated ...

Advertisment

கரோனா சூழல் காரணமாக‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள், தாயகம் திரும்பி வரும் நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கள் உடல், உடைமைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (29.01.2021) திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவர் உடலில் மறைத்து கொண்டுவந்த 799 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.40 லட்சம் என தெரிய வந்துள்ளது.