40 fishermen in tamilnadu puducherry

நேற்று (24.03.2021) அதிகாலை 2 விசைப் படகுகளுடன் மீன் பிடிக்கச் சென்ற 20 ராமேஸ்வரம் மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட 20 மீனவர்களும் தலைமன்னார் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில், புதுக்கோட்டையைச்சேர்ந்த 14 மீனவர்கள் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் காரைநகர் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒரு படகுடன் காரைக்காலைச் சேர்ந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டு திரிகோணமலை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுட்டள்ளனர். இதனால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்தமொத்தம் 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.