கடலூர் மாவட்டம், சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அதிதீவிர கனமழை பெய்துவருகிறது. இதனால் சிதம்பரம் பகுதியில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், புவனகிரி அருகே சாத்தபாடி கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற4 வயது சிறுவன் வெள்ளநீர் புகுந்த குடிசை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அதேபோல் குமராட்சியில் 65 வயது முதியவர் நன்னி, சுவர் இடிந்து பலியாகியுள்ளார்.