Advertisment

நாய் கடித்ததில் படுகாயம்; 4 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

4-year-old girl was admitted to hospital after being bitten by dogs near Manaparai

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வடிவேல் என்பவரது 4 வயது சிறுமி, தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் சிறுமியைக் கடித்துக் குதறவே சிறுமி‌ சப்தம் போட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு பார்த்தபோது வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து உடனடியாகச் சிறுமியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களையும்‌ கோழி மற்றும் கால்நடைகளையும் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இதேபோல் சம்பவத்தால்பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

Dogs trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe