சிறுமி ஒருவரை டாஸ்மாக்கிற்கு அழைத்துச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவன் சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக அந்த சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மதுரா கொத்தம்பாக்கம்பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். குறிப்பாக 25 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன் அந்த தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய உறவினரான நிலக்கர்என்ற இளைஞருடன் சென்றஅமீரின் மகள் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் அவனிடம் விசாரித்துள்ளனர்.ஆனால் மது போதையில் இருந்த நிலக்கர்அந்த சிறுமி என்ன ஆனார்என்பது குறித்து தெளிவாக சொல்லவில்லை. இதனால் பல இடங்களில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர் பெற்றோர்கள். இப்படிபல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இப்படியிருக்க திங்கட்கிழமை காலையில் ஹாலோபிளாக் கற்கள்தயார் செய்யும் அந்த தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஒரு முட்புதரில் காணாமல் போன அந்தச் சிறுமி முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக வெள்ளவேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக சிறுமியின் உடலை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையில்ஈடுபட்ட போது முதலில் சிறுமி தவறி விழுந்ததாக நிலக்கர்சொன்னதை உண்மை என நம்பி காவல்துறையினர் வழக்கை முடிக்கலாம் என நினைத்தநேரத்தில் இது ஒரு கொலை என்பது சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்தது.
அதனையடுத்து நிலக்கரைபோலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதேபோல்அவனதுகூட்டாளிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை நிலக்கர்டாஸ்மார்க் மதுக் கடைக்கு அழைத்துச் சென்ற தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நிலக்கரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் மரணத்திற்கான திடுக்கிடும் காரணம் தெரிய வந்தது. சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு சிறுமியுடன் சென்ற நிலக்கர் திரும்பி வரும்போது சிக்கன் பக்கோடா வாங்கி வந்ததாகவும், பெரிய பாலம் ஒன்று மேல் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும்,அப்போது சிக்கன் பக்கோடா தனக்கு வேண்டும் என கேட்டு அந்த சிறுமி அடம்பிடித்ததில்அந்த சிறுமி நிலக்கரின்கையை கடித்ததால் ஆத்திரமடைந்த நிலக்கர்சிறுமியைஅடித்துக் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.மேலும்சிறுமி கீழே விழுந்து உயிர் இழந்ததாக நாடகமாடியதையும்ஒப்புகொண்டான். இதனையடுத்து வடமாநில கொடூரன்நிலக்கரைகைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.