சென்னை அமைந்தகரையில் மதில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் கட்டன்ஞி நகரில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து முஸ்கான் எனும் நான்கு வயது சிறுமியும், தவான் எனும் 8 வயது சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/121.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/123_0.jpg)
நேற்று பெய்த கனமழையால் வீட்டின் முன்புறம் இருந்த சுமார் இருபதடி உயரமுள்ள வேப்பரம் சுமார் 8 அடி உயரமுள்ள மதில்சுவர் மீது லேசாக சாய்ந்துள்ளது ஆனால் அதை அந்தவீட்டார்களால்பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து இன்று மாலை வீட்டில் உள்ள எட்டு வயது சிறுவன் தவான் மற்றும் அவனது நான்கே வயதானதங்கை முஸ்கான் ஆகியோர் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக வேப்பமரமானது மதில்சுவரின் மீதுசாய்ந்து மதில் சுவர் இடிந்தது. அந்த இடிபாட்டில் இருவரும் சிக்கிக்கொண்டனர்அந்த இடிபாடில் சிக்கிக்கொண்ட சிறுவன் சிறுமியை மீட்க்கப்பட்டபோது இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் பெருத்த சோகமும் நிலவி வருகிறது.
Follow Us