Advertisment

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

m,

தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கியதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பொன்னேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் பகுதியைச்சேர்ந்தவர் வசந்த். இவரின் 4 வயது குழந்தை சஞ்சீஸ்வரன். அப்பகுதியில் உள்ள பால்வாடி பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் சமைப்பதற்காக சஞ்சீஸ்வரனின் அம்மா தேங்காய் துண்டுகளை நறுக்கி வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த குழந்தை சஞ்சீஸ்வரன் யாரும் பார்க்காத நேரத்தில் தேங்காய் துண்டு ஒன்றை வாயில் போட்டுள்ளார். அது எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டைக்குள் சிக்கியது.

Advertisment

இதனால் சிறுவன் பேசமுடியாமல் அருகில் இருந்த அம்மாவை நோக்கி ஓடியுள்ளான். உடனடியாக பையனை தூக்கிக்கொண்டு வசந்த் மற்றும் அவரது மனைவி பழவேற்காடு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பிரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

child coconut ponneri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe